ஊருக்குள் வளம் வந்த 4 காட்டு யானைகள்...காட்டிற்கே விரட்டி அடித்த வனத்துறையினர்...

ஊருக்குள் வளம் வந்த 4 காட்டு யானைகள்...காட்டிற்கே விரட்டி அடித்த வனத்துறையினர்...
Published on
Updated on
1 min read

பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் குட்டி யாணையுடன் மூன்று காட்டு யானைகள் விவசாய நிலத்தில் புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம், கரகூர், சீரியம்பட்டி ஆகிய கிராமத்தில் நேற்றிரவு உணவு மற்றும் தண்ணீர் தேடி 20 வயது கொண்ட 3 யானைகள் ஒரு குட்டி யானை என மொத்தம் 4 காட்டு யானைகள், முருகேசன் என்பவரது   நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது.

யானையின் பிளிறல்  சத்தம் கேட்டு கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அப்பகுயில் முகாமிட்டு பட்டாசு வெடித்து யானைகளை அருகில் உள்ள மொரப்பூர் காப்புக் காட்டிற்க்கு 4காட்டு யானைகளையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து  அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் அடிக்கடி காட்டு யானைகள் இரவு நேரத்தில் கிராமத்தில் புகுந்து விவசாய பயிர்களையும்,  அழித்து வருவதாகவும், காட்டு யானைகளை முழுமையாக அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் கொண்டு செல்ல தமிழக அரசு உடனடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com