பொறியாளர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை...

பொறியாளர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை...

பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 60 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
Published on

வேலூர் | ஓட்டேரி கமலச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த தனசேகர் இவர் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தன் சொந்த வேலையாக சென்னை சென்றார்.

இந்நிலையில் தனசேகரின் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பீரோக்களில் இருந்த 5 லட்சம் ரொக்கம் 60 சவரன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வீடு திரும்பிய தனசேகர் வீடு திரும்பிய போது வீட்டின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தர், உடனடியாக போலிசுக்கு தகவலளித்த நிலையில், பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டை நம்பி விட்டு போக முடியாதப்படி, சமீப காலங்களில் திருட்டு பயம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. தனசேகர் வீட்டில் நடந்த இச்சம்பவத்தால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com