புயலில் வேரோடு சாயும் 30 ஆண்டுகள் பழமையான மரம்...! வெளியான வீடியோ காட்சி..!

புயலில் வேரோடு சாயும் 30 ஆண்டுகள் பழமையான மரம்...! வெளியான வீடியோ காட்சி..!
Published on
Updated on
1 min read

மாண்டஸ் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இந்நிலையில், 30 ஆண்டுகள் பழமையான மரம் வேருடன் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

சென்னை ஐஸ் ஹவுஸ் முருகப்பன் தெரு பகுதியில் சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் சுற்றுச்சவர் அருகில் 30 ஆண்டுகள் பழமையான பஞ்சு மரம் 70 அடி நீளத்தில் இருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மாண்டஸ் புயல் காரணமாக வீசிய சூறைக் காற்றால் அந்த மரம் வேரோடு சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அரசுப் பள்ளியின் சுற்றுச் சுவர் சுமார் 30 மீட்டர் நீளத்திற்கு இடிந்து விழுந்தது சேதமடைந்தது. மேலும் விழுந்த மரத்தின் கிளைகள் அருகே உள்ள வீட்டின் கூரை மீதும் விழுந்ததால் வீடும் கடும் சேதமடைந்தது. 

அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் பலத்த சேதம் அடைந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சரிந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி நிலைமையை சரிசெய்தனர். இந்நிலையில் மாண்டஸ் புயலால் வீசிய சூறைக்காற்றில்  வேரோடு சரிந்து விழும் மரத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com