50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்...!

50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்...!
Published on
Updated on
2 min read

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி கிராமத்தில் 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவனை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள் பட்டி அருகே உள்ள கோ மருதப்பபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான ஆனந்த். இவரது மகன்  அர்ஜுன் ஆறாவது படித்து வருகிறான் இந்த நிலையில் குறுக்கல் பட்டி பகுதியில்  வீட்டில் வளர்த்து வரும் ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக தனது தாத்தா முருகப்பனுடன் சென்றுள்ளான்.

அப்போது அப்பகுதியில் உள்ள மகாராஜன் என்பவருடைய 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தண்ணீர் குடிப்பதற்காக சென்றுள்ளான் அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளான். சிறுவனுக்கு சரிவர நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கிணற்றில் விழுந்த சிறுவன் அங்கு இருந்த பைப் லைனை பிடித்து அலறல் சத்தம் கொடுத்துள்ளான். இதை பார்த்த சிறுவனுடைய தாத்தா முருகப்பன் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த சங்கரன்கோவில் தீயணைப்பு இரவு பணிகள் துறையினர், கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அர்ஜுனை சுமார் அரை மணி நேரம் போராடி, கயிறு கொண்டு கூடை போல் கட்டி அதில் சிறுவனை அமர வைத்து மேலே கொண்டு வந்தனர். 

சுமார் 50 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தகவல் அறிந்து விரைந்து வந்து சிறுவனை உயிருடன் மீட்ட சங்கரன்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com