
போடி பழைய பேருந்து நிலையம் அருகே காளைமாட்டிடம் இருந்து தனது கன்றை காப்பாற்ற சண்டை இட்டு 8அடி ஆழம் உள்ள சாக்கடையில் விழுந்த பசுமாட்டை தீயணைப்புதுறையினர் மீட்டனர் .
மேலும் தெரிந்து கொள்ள | பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தக் கோரி ஊழியர்கள் இரண்டு நாள் விடுப்பு போராட்டம்...
தேனி மாவட்டம் :
போடி பழைய பேருந்து நிலையம் அருகே கன்றுடன் இருந்த பசுமாட்டிடம் காளைமாடு ஒன்று தனது வீரத்தை காட்ட தாய்பசுவை நோக்கி வந்தபோது, கன்றுக்குட்டி காளைமாட்டை நோக்கி ஆக்ரோசமாக செல்லவே தனது கன்றுக்குட்டியை காப்பாற்ற காளைமாட்டுடன் சண்டையிட்ட பசுமாட்டை காளைமாடு தாக்கியதில் சாலை ஓரம் இருந்த சாக்கடை பள்ளத்தில் தவறி விழுந்தது. இதை கவனித்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக பசுவை சற்று மேடான பகுதிக்கு கன்றுகுட்டியை காட்டி அழைத்து வந்து மாட்டை மீட்டு கன்றுக்குட்டியுடன் அனுப்பி வைத்தனர். தனது கன்றுக்குட்டிக்கு ஆபத்து என அறிந்து காளையிடம் சண்டையிட்டு சாக்கடையில் விழுந்த பசுமாட்டினை தீயணைப்புத்துறையினருடன் இணைந்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் உணர்ச்சி பெருக்குடன் பசுவை மீட்டு அதன் கன்றுக்குட்டியுடன் அனுப்பி வைத்தனர்.
மேலும் தெரிந்து கொள்ள | சாலையோரம் நிறுத்தப்பட்ட கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு...