காதலர் தினத்தில் திருநம்பிக்கும் பட்டதாரி பெண்ணிற்கும் சுயமரியாதை திருமணம்

காதலர் தினத்தில் திருநம்பிக்கும் பட்டதாரி பெண்ணிற்கும் சுயமரியாதை திருமணம்
Published on
Updated on
1 min read

கோபிசெட்டி பாளையத்தில் உள்ள மனிதம் சட்ட உதவி மையத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சிவலிங்கம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சென்னியப்பன் முன்னிலையில் திருநம்பிக்கும் பட்டதாரி பெண்ணிற்கும் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.

6 மாத காலமாக பழக்கம்

 காஞ்சிபுரம் மாவட்டம்  திருமுக்கூடல் பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்த காளியப்பன் மகள் பி.காம் பட்டதாரியான அருணாதேவி என்பவருக்கும், விருதுநகர் மாவட்டம் அழகாபுரி காந்திநகர் பகுதியை சேர்ந்த  அருண்பாஷ் என்ற திருநம்பிக்கும் இடையே கடந்த 6 மாத காலமாக பழக்கம் ஏற்பட்டு உள்ளது.அருணாதேவி காஞ்சிபுரத்தில் இருந்து விருதுநகர் அழகாபுரி சென்ற போது அருண்பாசுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

மனிதம் சட்ட உதவி மையம்

அதைத்தொடர்ந்து இருவரும் காதலித்த நிலையில்ää இவர்களது காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும்ää அதை ஏற்க மறுத்ததால் இருவரும் கடந்த இரு மாதங்களாக வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தனர்.அதைத்தொடர்ந்து இருவரையும் குமாரபாளையத்தில உள்ள நண்பர் மூலமாக இன்று கோபியில் உள்ள மனிதம் சட்ட உதவி மையத்தில் தஞ்சமடைந்தனர்.

பெரியார் உருவபடத்திற்கு முன்னிலையில் திருமணம்

அதைத்தொடர்ந்து இருவருக்கும் தந்தை பெரியார் உருவ படத்திற்கு முன்னிலையில் மாலை மாற்றி சீர்திருத்த திருமணம் செய்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com