அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து...

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகின.
அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து...
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் | திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து இரும்பு தளவாடங்களை ஏற்றி வந்த லாரி வந்து கொண்டிருந்தது. அந்த இரும்பு தளவாடங்கள் 2 அடிக்கு வெளியே நீட்டிக் கொண்டு எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் வந்து கொண்டிருந்தது.

அப்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை லட்சுமாபுரம் பகுதியில் வளைவில் திரும்பும் போது எதிரே சரக்கு ஆட்டோ வெளியே நீட்டிக் கொண்டு வந்த இரும்பு தளவாடத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதே போல் லாரியின் பின்னால் வந்த கார் லாரியில் மோதியுள்ளது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் வந்த துளசிராமன், நாகேந்திரன் ஆகியோர் பலத்த காயம் அடைந்ததால் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதில் துளசிராமனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பின்னால் லாரியின் மீது மோதிய விபத்தில் காரில் வந்த சித்தையா என்பவருக்கும் காயம் ஏற்பட்டு அவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்தடுத்த மூன்று வாகனங்கள் மோதி விபத்தால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதனையடுத்து போக்குவரத்து போலீசார் மற்றும் கனகம்மாசத்திரம் போலீசார் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதி வழியாக செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் மூன்று வாகனங்கள் விபத்து மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்...

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com