மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி...

ஆலங்குடியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி ஒன்று தஞ்சம் அடைந்துள்ளது.
மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி...
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் | பேராவூரணி பணஞ்சேரி கிராமத்தை சேர்ந்த சுகுமாரன் மகள் 22 வயதான பட்டதாரி தீபிகா. இவர் அதே பகுதியை சேர்ந்த வளப்பிரமன்காடு மாசிலாமணியின் 27 வயதான மகன் விவேக்-கை காதலித்து வந்துள்ளார். ஐடிஐ முடித்துள்ள விவேக்குடனான தனது காதலை தீபிகாவின் குடும்பத்தினர் எதிர்த்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி காதலன் விவேக்குடன் வீட்டை விட்டு சென்று பட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி 24ஆம் தேதி பட்டுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

குடும்பத்திற்கு தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என்று  ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  தஞ்சம் அடைந்தனர்.

ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் தீபிகா கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் உஷாராணி வழக்குபதிவு செய்து இரு குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்தனர். இரு தரப்பு பெற்றோர்களும் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் பெண் வீட்டார் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

என் காதல் கணவருடன் செல்வேன் என்று உறுதியாக கூறியதை அடுத்து தீபிகாவை போலீசார் கணவருடன் அனுப்பி வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com