ரூ. 2.85 கோடிகளுக்கு கட்டப்படும் பாலம் தரமற்றது என குற்றச்சாட்டு...

குளித்தலை அருகே 2.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டும் வரும் பாலம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
ரூ. 2.85 கோடிகளுக்கு கட்டப்படும் பாலம் தரமற்றது என குற்றச்சாட்டு...
Published on
Updated on
2 min read

கரூர் | குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சி மகிளிப்பட்டியில் உள்ள புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்காலின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் அமைந்துள்ளது. 

இந்த பாலம் மிகவும் குறுகலாகவும், பலவீனம் அடைந்த காரணத்தினால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கட்டளை மேட்டு வாய்க்கால்களின் குறுக்கே புதிதாக அகலமாக பேருந்துகள் சென்று வரக்கூடிய வகையில் அமைத்து தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று ரூபாய் 2.85 கோடி மதிப்பில் 2022 ஆம் ஆண்டு இதற்கான டெண்டர் விடப்பட்டநிலையில்  பழனிச்சாமி என்பவர் டெண்டர் எடுத்து  கட்டுமான பணிகளை துவங்கியுள்ளார். 

ஆனால் பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்ற நிலையில் ஜூன் மாதத்திற்குள் முடிவடைய வேண்டிய பாலம் கட்டுமான பணிகள் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

தற்போது நீர் திறப்பு நிறுத்தப்பட்டதால்  கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மீண்டும் பாலம் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. ஆனாலும் பணிகள் மிகவும் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வந்தாலும் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட 10 அடி குழியில் தன்ணீர் தேங்கியுள்ளது. 

அவ்வாறு அடித்தளம் தோன்றிய குழியில் உள்ள தேன்கியுள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றாமல் கான்கிரீட் கொட்டப்பட்டு அடித்தளம் அமைக்கப்படுகின்றன.

இதனால் கான்கிரீட் கலவை நீரில் கரைந்து வெளியேறி ஜல்லி கற்கள் மட்டும் காணப்படுகிறது . இதனால் பாலத்தின் அடித்தளம் வலுவாக அமையாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

இவ்வாறு செய்வதால் பின்நாளில் பாலம் கூடிய விரைவில் வலுவிழந்து போவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், தங்களின் பத்தாண்டு கால கோரிக்கை நிறைவேறி பாலம் கட்டுமான பணி நடைபெற்ற வரும் வேளையில் தற்போது தரம் இல்லாத கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சட்டியுள்ளனர். 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com