தூக்க கலக்கத்தில் நிகழ்ந்த விபத்து !! இவ்வளவு அஜாக்கரதியா ?என்ன ஆயிருக்கும்!!!

தூக்க கலக்கத்தில் நிகழ்ந்த விபத்து !! இவ்வளவு அஜாக்கரதியா ?என்ன ஆயிருக்கும்!!!
Published on
Updated on
2 min read

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளில் ஈடுபட்டிருந்த கிரேனை தூக்கக் கலக்கத்தில் இயக்கி பயணிகள் இல்லாத மாநகரப் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெட்ரோ :

சென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் சுரங்கம் தோண்டி அமைக்கப்பட்டுள்ளன. மேல்வாரியாக, இத்திட்டம் "சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தை" ஒத்திருந்தாலும், இத்திட்டத்தின்படி இயங்கும் தொடருந்துகள் தில்லி மெட்ரோ திட்டத்தை ஒத்திருக்கும். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரு வழித்தடங்களில் சேவையினை வழங்குகின்றன.

சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் (CMRL), இந்தியாவின் சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு விரைவான போக்குவரத்து அமைப்பு ஆகும். இந்த திட்டத்தின் முதல் பகுதியளவில் திறந்த பின்னர், 2015 ஆம் ஆண்டில் கணினி முறைமை வருவாயைத் தொடங்கியது. இதில் 54.1 கிலோமீட்டர் (33.6 மைல்) நீளம் கொண்ட இரண்டு வண்ண வழித்தடங்கள் உள்ளன. சென்னை மெட்ரோ, தில்லி மெட்ரோ, பெங்களூரு மெட்ரோ மற்றும் ஐதராபாத் மெட்ரோ ஆகியவற்றிற்கு பிறகு இந்தியாவில் நான்காவது பெரிய மெட்ரோ அமைப்பாகும்.சென்னையில் ஆங்காங்கே தற்போது அனைத்து வழித்தடங்களில் மெட்ரோ அமைக்கப்பட்டு வருகிறது.அவராக சென்னை வடபழனி ஆர்காடு பகுதியிலும் மெட்ரோ பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த பேருந்து :

இந்நிலையில் அந்த பகுதியில் சாலைகளில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை கிரேன் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. அப்போது வடபழனி பேருந்து பணிமனையில் இருந்து 159A/B என்ற தடம் எண் கொண்ட பயணிகள் இல்லாத மாநகரப் பேருந்து கோயம்பேடு நோக்கி செல்ல அவ்வழியாக வந்தது. அப்போது அங்கு கிரேனை இயக்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளி தூக்க கலக்கத்தில் கிரேனை இயக்கி அவ்வழியாக வந்துகொண்டிருந்த மாநகரப் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி மற்றும் இடதுபுற பகுதி கடுமையாக சேதமடைந்தது. பேருந்தை இயக்கி வந்த மாநகரப் பேருந்து ஓட்டுனர் பழனி என்பவருக்கும் கையில் லேசான காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த வடபழனி போலீசார் பேருந்தை அப்புறப்படுத்தி பணிமனைக்கு அனுப்பி வைத்து விபத்துச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எது ஏற்படாமல் ஓட்டுனருக்கு மட்டும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.கிரேன் இயக்கிய  வடமாநில தொழிலாளியின் கவனக்குறைவால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com