விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் குமார். இவர் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.இவர் சுப்ரமணி என்பவரிடம் வாங்கிய 6,1/2 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றுவதற்காக விண்ணப்பித்துள்ளார்.இந்த நிலையில் ஓங்கூர் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் என்பவர் தற்போது ஒலக்கூர் கிராமத்தில் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார், இவர் பட்டா மற்றுதல் செய்வதற்காக ஐ டி ஊழியர் அசோக் குமாரிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார், இதையடுத்து செய்வதறியாத ஐ டி ஊழியர் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கூலி தர தாமதமானதால், முதியவரை கொன்ற கொத்தனார்
இந்த தகவலின் பெயரில் ஓங்கூர் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே ஒளிந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விவசாயி கிராம நிர்வாக அலுவலரிடம் ரசாயனம் கலந்த பணத்தை வழங்கிய போது, கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால் சுதர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும்போதுலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் இப்பகுதியில் உள்ள அரசு அலுவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.