அரசு மருத்துவமனையில் காப்பாளர்கள் மீது தாக்குதல்...

அரசு மருத்துவமனையில் காப்பாளர்கள் மீது தாக்குதல்...

Published on

நாமக்கல் : அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மருத்துவமனையில் குழந்தை நல பிரிவில் அருள் - ராஜலட்சுமி தம்பதியினரின் 5 வயது குழந்தையை உடல்நல குறைவு காரணமாக கடந்த நேற்று சிகிச்சை அனுமதித்தனர்.

குழந்தையுடன் தாய் ராஜலட்சுமி மட்டும் இருந்துள்ளார். அதனால் காலை உணவு கொடுக்க வந்த அருள், மனைவி ராஜலட்சுமி மற்றும் சிறுமியுடனே இருந்துள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த காப்பாளர் சந்தோஷ், நோயாளியுடன் ஒருவர் மட்டும் இருக்க வேண்டும் மற்றவர்கள் வெளியேற வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அருள் காப்பாளர் சந்தோஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் காப்பாளர் சந்தோஷை தாக்கியுள்ளார்.

இதனை தட்டிக்கேட்ட மற்றொரு காப்பாளர் மணிமேகலை மற்றும் பரிமளா ஆகியோரையும் சிறுமியின் தந்தை அருள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காப்பாளர்கள் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி வழக்கு பதிவு செய்த நாமக்கல் போலீசார் அருளை கைது செய்தனர்.

இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com