பொள்ளாச்சியில் நடந்த பலூன் திருவிழா... கூட்டம் கூட்டமாக குவிந்த பொது மக்கள்...

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அடுத்த ஆண்டு அதிகப்படியான பலூன்கள் பறக்க விடப்படும் சுற்றுலாத்துறை அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.
பொள்ளாச்சியில் நடந்த பலூன் திருவிழா... கூட்டம் கூட்டமாக குவிந்த பொது மக்கள்...
Published on
Updated on
1 min read

கோவை | பொள்ளாச்சியில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள ஆட்சி பட்டி மைதானத்தில் நடந்து வருகிறது, பிரான்ஸ் ஜெர்மனி நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட பலூன்கள் வானில் வட்டமடித்தது.

3 நாட்கள் நடக்கக்கூடிய இந்த திருவிழாவை உள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகப்படியான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர் இறுதி நாளான இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தமிழ்நாட்டின் வெப்ப காற்று பலூனில் பறந்து சென்றார்.

செய்தியாளிடம் பேசிய அமைச்சர்

பலூன் திருவிழாவை காண சுற்றுலா பயணிகளின் ஆர்வம் அதிக அளவில் உள்ளதாகவும். ஆகவே தமிழகத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அடுத்த ஆண்டு கண்டிப்பாக அதிகப்படியான பலூன்கள் வானில் பறக்க விடப்படும்

என்று தெரிவித்தார். மேலும் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் வானில் வட்டமடித்த பலூன்களை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com