மூளைச்சாவு அடைந்த இளைஞாின் உறுப்புகள் தானம்...

சேலத்தில் விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது.
மூளைச்சாவு அடைந்த இளைஞாின் உறுப்புகள் தானம்...
Published on
Updated on
1 min read

சேலம் மல்லூர் பகுதியை சேர்ந்த முருகன்,வேலாயி தம்பதியர்களின் மகன் மணிகண்டன்(26). சேகோசார்வ் ஆலையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த இவர் டந்த 30 ஆம் தேதி பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, லாரி மோது பயங்கர விபத்துக்குள்ளானார்.

படுகாயமடைந்த மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று இரவு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, உடல் உறுப்புகளை தானமாக வழங்க மருத்துவர்கள் குடும்பத்தாரிடம் பேசியதையடுத்து, அவரது உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.

இருதயம், கண்கள், இருதயவாழ்வு, கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் எட்டு பேருக்கு வழங்குவதற்கு சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் மூலமாக சென்னைக்கு இருதயம் மற்றும் நுரையீரல், கோவைக்கு கல்லீரல், ஈரோடு மற்றும் சேலத்திற்கு சிறுநீரகம் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்புகளும் அனுப்பி வைக்கப்பட்டது.

தனது மகனது உறுப்புகளை எடுத்துச் சென்ற பெட்டியைப் பார்த்ததும், பெற்றோர் கதறி அழுதுள்ளார். இதனால், அங்கு அனைவருக்கும் கண்கள் கலங்கி இருக்கின்றனர். இந்த துக்க சம்பவம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com