மாடு முட்டி மாணவன் உயிரிழப்பு - தூண்டிவிட்ட மாட்டின் உரிமையாளர்

ஜல்லிக்கட்டு காளையை அடக்கினால் 200 ரூபாய் தருகிறேன் என உரிமையாளர் கூறியதை நம்பி கட்டிய மாட்டை அடக்க முயன்ற பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.
kalaimadu news
kalaimadu news
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசையாஸ். இவர் மகன் தீரண்பெனெடிக்ட்.

இவர் வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்த தீரண் பெனெட்டிக்ட் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அற்புதாபுரம் சாலையில் உள்ள ஒரு பண்ணை அருகே வெட்டவெளியில் நின்று கொண்டிருந்த மாட்டை பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மாடு அவருடைய நெஞ்சில் குத்தியது. இதில் பலத்த காயமடைந்த மாணவர் நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார்.

உடனே அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மாணவனின் உறவினர்கள் கூறுகையில், அப்பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் மாட்டிற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில், மாணவர்களிடம் மாட்டை அடக்கினால், 200 ரூபாய் தருகிறேன் என கூறியதாகவும், பணத்திற்கு ஆசைப்பட்டு மாணவர்கள் காளையை அடக்கிய போது இந்த விபத்து நடந்ததாகவும், எனவே மாணவனின் உயிரிழப்பிற்கு காரணமான ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com