“பேருந்து டயரில் சிக்கி நசுங்கிய இரண்டு வயது குழந்தை” - தாய் கண் முன்னே மகனுக்கு நேர்ந்த சோகம்!

“பேருந்து டயரில் சிக்கி நசுங்கிய இரண்டு வயது குழந்தை” - தாய் கண் முன்னே மகனுக்கு நேர்ந்த சோகம்!

ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது பேருந்து மோதி குழந்தை டயரில் சிக்கி...
Published on

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே திருவாலங்காடு ஒன்றியம் நாபளூர் கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நிலையில் இவருக்கும் மணி மேகலா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் முதல் மகன் ரவீன் குன்னத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே போல இரண்டாவது மகன் முகிலன் திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார். மூன்றாவது மகனான காமேஸ்வரனுக்கு இரண்டு வயது ஆகிறது. எனவே மணி மேகலா வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து வந்திருக்கிறார். இன்று காலை வழக்கம் போல குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்து பள்ளி வாகனத்திற்கு காத்திருந்த நிலையில் ரவீனின் பள்ளி வாகனம் வந்தபோது அவரை வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

அதனை தொடர்ந்து முகிலனின் பள்ளி பேருந்துக்காக காத்திருந்தார் இதற்கிடையில் இரண்டாவது குழந்தை காமேஸ்வரன் ரோட்டில் விளையாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது முகிலன் படிக்கும் பள்ளியான நியூ ஈடன் பள்ளி வேன் வேகமாக வந்து ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது பேருந்து மோதி குழந்தை டயரில் சிக்கி படுகாயமடைந்து. இதனை பார்த்த குழந்தையின் தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Admin

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனை தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யபட்டு திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கனகம்மா சத்திரம் போலீசார் வேன் ஓட்டுநர் ஸ்டீபனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தனியார் பள்ளியின் உரிமையாளர் திருத்தணியில் திமுக மாவட்ட நிர்வாகியாக உள்ளார் என்றும் மேலும் குழந்தையை மோதிய பள்ளி வாகன -எண்-TN-20 BJ 6763 இந்த வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை என்றும் உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். மேலும் பள்ளி உரிமையாளர் பள்ளி வேன் ஓட்டுநரை இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தை இயக்கியதற்காக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் குழந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர்கள் உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com