
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூச திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணமும், வெள்ளி தேரோட்டமும் நாளை நடைபெறுகிறது.
தைப்பூசத் தேரோட்டம் நாளை மறுநாள் சனிக்கிழமை அன்று மாலை நடைபெறவுள்ளது. இந்நிலையில் 5ம்நாள் திருவிழாவான இன்று ஏராளமான பக்தர்கள் பழனியில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் காவடி எடுத்து ஆடிப்பாடியும், உடலில் அலகு குத்தியவாறு சப்பரம் இழுத்தும்கிரிவலம் வந்து சாமிதரிசனம் செய்துவருகின்றனர்.
பாதயாத்திரை வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி சரவணப்பொய்கை, சண்முக நதி மற்றும் இடும்பன் குளம் ஆகிய புனித தீர்த்தங்களில் நீராடி சாமிதரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு வசதிதாக ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.