கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி...

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி...
Published on
Updated on
1 min read

சென்னை | ஸ்டார்ட் அப் தமிழ் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. 

100 நாட்களில் 500 கல்லூரிகளில் மாணவிகளுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் மற்றும் பெண்கள் தலைமையிலான குழுக்களுக்கு மாநில அளவிலான பிட்ச்சிங் போட்டி நடத்துகின்றனர். 

கல்லூரி மாணவ மாணவிகள் இல்லத்தரசிகள் என ஒட்டுமொத்த பெண்களுக்கான தொழில் முனைவோர் போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெரும் 50 பெண்களுக்கு தொழில் செய்ய பண உதவி, பயிற்சி மற்றும் எந்த விதமான உதவியாக இருந்தாலும் செய்து தரப்படும் என கூறினார். 

நாட்டில் ஒவ்வொரு பெண்களும் தொழில் முனைவோர் ஆக வேண்டும் அல்லது சுய தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பெண்கள் அதிகாரமளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது என தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com