டிஜிட்டல் வங்கி அலகை வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் திறந்து வைத்த பிரதமர்...

டிஜிட்டல் வங்கி அலகை வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் திறந்து வைத்த பிரதமர்...
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டில் டிஜிட்டல் வங்கி அலகை வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அதன் திறப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.

75 டிஜிட்டல் வங்கி அலகுகளை இன்று நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். நிதி நடைமுறையை வலுப்படுத்தம் நடவடிக்கையாக INDUSIND டிஜிட்டல் வங்கி அலகை வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இதன் ஒரு வங்கியாக செங்கல்பட்டு வேதாசலம் நகரில் அமைந்துள்ள INDUSIND டிஜிட்டல் வங்கியின் அலகு திறப்பு விழாவில் மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதில் முன்னதாக ரிப்பன் வெட்டியும்குத்து விளக்கேற்றியும் வங்கி அலகு திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் வங்கி அலகை திறந்து வைத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com