சென்னை எல்லைச் சாலை திட்டம்...!!!

சென்னை எல்லைச் சாலை திட்டம்...!!!
Published on: 
Updated on: 
1 min read

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மாநிலத்தின் தெற்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்களை எண்ணூர் மற்றும் காட்டுப்புள்ளி துறைமுகங்களுடனும் அண்டை மாநிலங்களுடனும் இணைத்து அதன் மூலம் வணிகம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த சென்னை எல்லை சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

சென்னை எல்லைச் சாலையானது 132.87  கிலோமீட்டர் தூரத்திற்கு ஆறு  இரட்டை வழி பாதையாக, இருபுறமும் இருவழி சேவை சாலைகளுடன் 15 , 626 கோடி மதிப்பில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இச்சாலை திட்டத்தினால் பொதுத்துறை மற்றும் தனியார் வாகனங்களை பயன்படுத்தும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.  இத்திட்டம் சென்னை நகருக்குள் வாகன நெரிசலை குறைப்பது மூலம் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கும்.  இத்திட்டத்திற்காக தற்போது வரை 550 கோடி செலவிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com