"என்ன இப்படி புதுசா கிளம்பியிருக்காங்க!?".. ரோட்டில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி - கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பப்ளிக்!

அப்போது பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென ..
t nagar boy abuse 24 years it girl
t nagar boy abuse 24 years it girl
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்று காலை இந்த பெண் தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென அந்த பெண்ணின் கன்னத்தை கிள்ளி "ஐ லவ்யூ" செல்லம் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பெண் சத்தம் போட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து அடி உதைத்து கம்பத்தில் கட்டி வைத்தனர். பிறகு தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் நேரில் வந்து அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் திநகரைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com