
சேலம் | எடப்பாடி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி ஊராட்சிக்குட்பட்ட வேட்டுவபட்டி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஊர் பொதுமக்கள் சார்பில் அதற்கான முன்னேற்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் சார்பில் மூலவர் சிலை அமைக்க ஒவ்வொரு குடும்பத்திலும் குறிப்பிட்ட தொகை செலுத்தி சிலை அமைக்க தயார் செய்து வந்தனர்.
தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட மூன்று குடும்பத்தினர் மட்டும் சேர்ந்து இன்று கோவிலில் சிலை அமைக்க கொண்டு வந்த போது அப்பபகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | பெண் ஊழியரிடம் அநாகரீகமாக நடந்துக் கொண்ட செயல் அலுவலர்...
தகவல் அறிந்து வந்த எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா இரு தரப்பினரிடம் அமைதியான முறையில் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மூலவர் சிலை அமைக்க முடிவு செய்துவிடலாம் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கோவிலை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் வேட்டுவப்பட்டி பகுதியில் சிறிது நேரம் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
மேலும் படிக்க | ஆற்றில் தத்தளித்த மூதாட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை...