கூட்டத்தில் திணறிய பக்தர் கூட்டம்.. கால் கடுக்க பல மணி நேரம் நின்று சாமி தரிசனம்...

திண்டுக்கல் பழனி முருகன், சீனிவாச பெருமாள் கோவில் உட்பட பல கோவில்களில் கூட்டம் கூடி பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கூட்டத்தில் திணறிய பக்தர் கூட்டம்.. கால் கடுக்க பல மணி நேரம் நின்று சாமி தரிசனம்...
Published on
Updated on
2 min read

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் திண்டுக்கலின் பிரசித்தியான பழனி முருகர் கோவில் மற்றும் மலையடிவார சீனிவாச பெருமாள் கோவில்களில் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

பழனி | தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டனர். பின்னர் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை, காலை 6 மணிக்கு மின் இழுவை ரயில் இயக்கமும் 7 மணிக்கு ரோப்கார் சேவை துவங்கப்பட்டது.

அடிவாரம் பகுதியில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும் காவடிகள் எடுத்தும் ஆடி பாடியும் , நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும் 20 ருபாய் கட்டண வரிசை 200 ருபாய் சிறப்பு வழி கட்டண தரிசனம் பொது தரிசனம் என சுமார் ஐந்து மணி காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

பேருந்து நிலையம் முதல் குளத்து பைபாஸ் சாலை, அடிவாரம், அய்யம்புள்ளி சாலை, திரு ஆவினன் குடி பகுதி என வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்த படி சென்றன காவலர்கள் போக்குவரத்து காவலர்கள் என ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறினர்.

மலை அடிவாரம் | சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை மூலவர் பெருமாளுக்கு சொர்ண அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முதலில் வரும் ஆயிரம் பக்தர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நாணயம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் நாணயத்தை பெற்றுக் கொண்டனர்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் பெருமாள் உற்சவமூர்த்தியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

அதேபோல் திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில், கோட்டை மாரியம்மன் கோவில் மலையடிவாரம் பத்திரகாளி அம்மன் கோவில், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு கோயில்களில் இன்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com