அறுவடைக்கு தயாரான வாழை மரங்கள் சேதம்...

அறுவடைக்கு தயாரான வாழை மரங்கள் சேதம்...

மேட்டுப்பாளையம் அருகே மழையுடன் வீசிய சூறாவளிக் காற்றால் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
Published on

கோவை | மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகையில் உள்ள இரும்பறை கிராமத்தில் பல நூறு ஏக்கரில் வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நேந்திரன், கதளி, பூவன், செவ்வாழை என பல ரக வாழைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இன்னும் ஓரிரு  வாரங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் வாழைத்தார்கள் இருந்தன.

இதே போல் இதன் சுற்றுவட்டார கிராமங்களான சிட்டேபாளையம், மோதூர், பால்காரன் சாலை ஆகிய  பகுதிகளிலும்  விவசாய நிலங்களில் பெருமளவு வாழை பயிரிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு மழையுடன் கூடிய சூறைக்காற்று இப்பகுதியில் வீசியது.

இதில் காற்றின் வேகம் தாங்காமல் இப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்த சேதமடைந்தது. ஒன்பது மாத பயிரான வாழைகள் அறுவடைக்கு தயாரான நிலையில் சேதமடைந்தது இப்பகுதி வாழை விவசாயிகளை கலக்கமடைய வைத்துள்ளது.

கடன் பெற்று முதலீடு செய்து பல மாத உழைப்பில் வளர்ந்த வாழை மரங்கள் இயற்கை சீற்றத்தால் முறிந்து விட்ட நிலையில் அரசு இதற்கான இழப்பீட்டை வழங்கி உதவிட பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com