சதுரகிரி மலைக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி...

சதுரகிரி மலைக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி...
Published on
Updated on
1 min read

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சித்திரை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையெறி சென்று சாமி தரிசனம் செய்ய நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சித்திரை மாத பிரதோஷம் மற்றும் வரும் ஏப்19ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ள அமாவாசை சிறப்பு பூஜைக்காக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் ஏப் 17 ந்தேதி முதல் வரும் ஏப் 20 ந்தேதி வரை நான்கு நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும் காய்ச்சல் சளி,இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீர் ஓடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை எனவும் ஒருவேளை அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல கூடாது எனவும் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com