மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி.. முதல் போட்டியிலேயே கலக்கிய தூத்துக்குடி மாணவர்கள்..!

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி.. முதல் போட்டியிலேயே கலக்கிய தூத்துக்குடி மாணவர்கள்..!
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழகம் நடத்தும் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து  இன்று துவங்கியது. இப்போட்டிகள் இன்று துவங்கி வரும் 6ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெறும் இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 14 அணிகள் கலந்து கொள்கின்றன. 

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர்  அந்தோணி அதிர்ஷ்டராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழக செயலர் லூர்து பிரிஸ், செவாலியர் C.I.R மச்சாது அவர்களின் மகன்கள் அன்டோ மச்சாது மற்றும் ஹாட்லி மச்சாது  ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்ற துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு கால்பந்து கழகம் மற்றும் தூத்துக்குடி கால்பந்து கழக தலைவருமான சேசையா வில்லவராயர் கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டிகள் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தூத்துக்குடி லசால் பள்ளி அணியும், புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி அணியும் விளையாடின. மிகவும் விருவருப்பாக நடைபெற்ற இப்போட்டியில் புனித லசால் பள்ளி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com