“தனியாருக்கு தாரைவார்க்காதே” - தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்...

தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மாநகராட்சியை கண்டித்து, துய்மைப்பணியாளர்கள் திடிர் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
“தனியாருக்கு தாரைவார்க்காதே” - தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்...
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சியில் 500 க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியில் வார்டு வாரியாக துய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 மாதமாக இவர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதி செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, துய்மை பணிகள் அனைத்தையும் தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சிகளை திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியது.

இதனை கண்டித்து 300 க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடிர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள் மாநகராட்சி நுழைவு வாயிலில் ஆணையாளர் வாகனம் முன்பு தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com