இரட்டை மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் ...

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு வைகை அணை அருகே இரட்டை மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயங்கள் நடைபெற்றது.
இரட்டை மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் ...
Published on
Updated on
1 min read

தேனி | ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயங்கள் நடத்தப்பட்டது.

தேன் சிட்டு, பூஞ்சிட்டு கரிச்சான், பெரிய மாடு ஆகிய நான்கு ரக மாடுகளுக்கான பந்தயங்கள் தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் தேன்சிட்டு ரகத்தில் 36 ஜோடிகளும், பூஞ்சிட்டு ரகத்தில் 30 ஜோடிகளும், கரிச்சான் ரகத்தில் 20 ஜோடிகளும், பெரிய மாடு ரகத்தில் 16 ஜோடிகளும் போட்டியில் பங்கு பெற்றன.

வைகை அணையில் இருந்து தேவதானப்பட்டி வரையில் ஆறு கிலோமீட்டர் முதல் 12 கிலோமீட்டர் வரையில் மாடுகளின் ரகத்திற்கு ஏற்ற தூரம் நிர்ணயம் செய்யப்பட்டது.  இந்த மாட்டு வண்டி பந்தயங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இரட்டை மாட்டு வண்டி ஆயிரக்கணக்கான மக்கள் சாலை வழிநெடுகிலும் நின்று ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு தேனி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com