' போதையில்லா உலகம் ' விழிப்புணர்வு ஓவியம் வரைந்த மாணவர்கள்...!

நெல்லையில் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு போதையில்லா உலகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்த பள்ளி மாணவர்கள்..!
' போதையில்லா உலகம் '  விழிப்புணர்வு ஓவியம் வரைந்த மாணவர்கள்...!
Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டத்தில் மகாத்மா காந்தியின் 154 - வது பிறந்தநாளை முன்னிட்டு போதை பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்த வகையில்,  நெல்லை  சிவராம் கலைக்கூடம், தனியார் மருத்துவமனை இணைந்து பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டு செல்வதற்காக ஓவிய பயிற்சி மாணவிகள் மூலம் ஒரு முன்னெடுப்பை தொடங்கினர். 

அதன்படி இன்று வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகாத்மா காந்தியின் 154 வது பிறந்தநாளை நினைவுபடுத்தும் விதமாக 154 அடி வெள்ளை திரைத்துணியை தரையில் விரித்து, அதில் போதையில்லா உலகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஓவியத்தை சிவராம் கலைக்கூட ஓவியப் பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் 50 பேர் இந்த ஓவியத்தை ஒரு மணி நேரத்தில் வரைந்து அசத்தினர். தொடர்ந்து துணியில் வரையப்பட்ட ஓவியத்தில் போதை பழக்கத்திலிருந்து வீழ்வது குறித்து யோகா புத்தக வாசிப்பு உள்ளிட்டவை குறித்தும்  வரைந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில் விழிப்புணர்வு ஓவிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com