
உலக வாய் முக அறுவை சிகிச்சை மருத்துவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாய் முக அறுவை சிகிச்சை மருத்துவ சங்கம் இணைந்து சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது அவசியத்தை குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும், திருச்சி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் கலந்துகொண்டு சைக்கிள் பேரணியை கொடியேசத்து தொடங்கி வைத்தார்.
கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கத்தில் துவங்கப்பட்ட சைக்கிள் பேரணி ஈசிஆர் சாலையில் அக்கரை பகுதிக்கு சென்று மீண்டும் ஈசிஆர் சாலையில் கொட்டிவாக்கத்தில் முடிவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பேரணியில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.