புத்தாண்டு முடிந்து வீடு திரும்புகையில், போக்குவரத்து நெரிசல்...

புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து வீடு திரும்பியபோது, இ.சி.ஆரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டு முடிந்து வீடு திரும்புகையில், போக்குவரத்து நெரிசல்...
Published on
Updated on
1 min read

சென்னை | கிழக்கு கடற்கரை சாலை கோவளம் சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் பல மணி நேரமாக நிலவி வந்தது.

2023 ஆம் ஆண்டு முதல் நாளான இன்று விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் வழிபாட்டு தலங்களுக்கும் சென்று மாலை வீடு திரும்பினார்.

மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் கோவளம் சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடும் பல மணி நேரமாக பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வருடத்தின் முதல் நாள் நண்பர்களுடன் குடும்பத்தார்களுடன் இன்றைய நாள் பொழுதை கழிக்க சந்தோஷமாக சென்ற நபர்கள் மாலை வீடு திரும்பிய போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com