பர்கூர் மலையில் தேவர்மலை சாலையில் வாகனங்களை வழிமறித்து போக்கு காட்டிய ஆண் யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் இருந்து தேவர்மலை செல்லும் சாலையில், ஆண் யானை ஒன்று வாகனங்களை வழிமறித்து போக்கு காட்டியது. இதனை தேவர்மலை, தாமரைக்கரை செல்லும் மலைவாழ் மக்கள் காட்டு யானையை ஸ்தம்பித்து, தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு யானை பார்த்து ரசித்தனர். சில மலைவாழ் மக்கள் அதனை வனப்பகுதியில் செல்லுமாறு தங்களது பாசையில் பேசினர். மேலும் சிலர் ஆபத்தை உணராமல் யானையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்பகுதியில் போக்கு காட்டிய ஆண் யானை அரை மணி நேரத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் சென்றது.