பதக்கம் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு...

பதக்கம் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு...

Published on

அரியலூர் | அரியலூர் ஆர். சி தூயமேரி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அண்மையில் விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில் பங்கேற்றார்கள்.

இதில் ஜீனியர் பிரிவில் 50-55 எடைபிரிவில் அஜய் என்ற 8 ம் வகுப்பு மாணவன் வெள்ளி பதக்கமும், 36-38 எடை பிரிவில் ராகவன் என்ற 8 ஆம் வகுப்பு மாணவன் வெங்கல பதக்கமும் சசிக்குமார் என்ற 09 ஆம் வகுப்பு மாணவன் 42-45 எடைபிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றனர்.

இதனையடுத்து பதங்கங்கள் வென்ற மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்தபோது சக மாணவர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தி இன்று வரவேற்பு அளித்தனர்.

இதில் அப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மாணவர்கள் உத்தரபிரதேசத்தில் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடதக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com