
கிருஷ்ணகிரி | போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள புதுமோட்டூர், குள்ளனுர், தட்ர அள்ளி, கண்ணன்ட அள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் ஏக்கர் கணக்கில் மா சாகுபடி செய்யபட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு எதிர் பார்த்த அளவு மழை பெய்ததால் மாமரங்களில் அதிக அளவு மா பூக்கள் பூத்திருந்த நிலையில் தொடர் பனி பொழிவு காரணமாக மா பூக்கள் கருகியதால் விவசாயிகள் அதற்கு மருந்து தெளித்து கட்டுப்படுத்தினர்.
மாம்பழத்திற்கே சிறப்பான போச்சம்பள்ளியில் பல வகையான மாக்கள் சாகுபடி ஆகின்றன. ஆனால், மா பிஞ்சுகள் வளரும் பருவத்தில் மழை பெய்து, தற்போது கடும் வெயில் தொடங்கிய நிலையில் மா மரங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் மா பிஞ்சுகளை காக்க ஒரு டிராக்டர் தண்ணீர் 500 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி மாமரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி மா மரங்களை காத்து விளைச்சலை பெருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
உணவை கொடுக்கும் விவசாயிகளே விவசாயத்திற்கு தண்ணீரை விலைக்கு வாங்கி நீர் பாய்ச்சும் அவல நிலை தற்போது தொடங்கியுள்ளதால், விவசாயிகளுக்கு மத்தியில் கடும் பதற்றமும் பயமும் உருவாகியுள்ளது.
மேலும் படிக்க | வெங்காயாம் விலை வீழ்ச்சி... கோபமடைந்த விவசாயிகள்!!!