சென்னை புறநகர் ரயிலில் தீ விபத்து...!!

சென்னை புறநகர் ரயிலில் தீ விபத்து...!!
Published on
Updated on
1 min read

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் ரயிலின் சக்கரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி புறநகர் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. மாலை நேரம் என்பதால் அலுவலகம் முடிந்து வந்த ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து வந்த மாணவர்கள் என ஏராளமானோர் இந்த ரயிலில் பயணித்தனர்.

அத்திப்பட்டு ரயில் நிலையத்தை கடக்க முற்பட்ட போது பிரேக் பிடித்ததில் ரயிலின் சக்கரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. புகை வருவதை கண்டு உடனடியாக அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி இறங்கி ஓட்டம் பிடித்தனர். 

இந்நிலையில் ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் ரயிலின் சக்கரத்தை ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து 30 நிமிடத்திற்கு பிறகு ரயில் மீண்டும் கும்மிடிப்பூண்டி நோக்கி புறப்பட்டு சென்றது. ரயில் சக்கரத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பரபரப்பு ஏற்பட்டது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com