
தஞ்சாவூர் | மானோஜிபட்டியை சேர்ந்தவர் 60 வயதான தங்கம். மகனுடன் வசித்து வரும் இவரை, இன்று அவரது மகன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், தங்கம் மன வேதனை அடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள புது ஆற்றில் திடீரென இறங்கியுள்ளார்.
தண்ணீரின் வேகத்தால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், தங்கம் ஆற்றில் இருந்து மேலே சென்ற ஒரு கயிறை பிடித்துக் கொண்டு தண்ணீரில் தத்தளித்துள்ளார்.
மேலும் படிக்க | பிரச்சனைகளுக்கு இடையில் கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டரில் மீட்பு...
ஆற்றில் விழுந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்த மூதாட்டியை கவனித்த கோவில் வியாபாரிகள், உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவலளித்துள்ளனர்.
புகாரின் பேரில் தீயணைப்பு துறையினர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆற்றுக்குள் குதித்து மூதாட்டி தங்கத்தை பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக மூதாட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் படிக்க | ரசாயன ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்து...தொடரும் மீட்பு பணி....