மன்னார்-வளைகுடா கடல் பகுதிகளில் அரிய வகை கடல் பசுக்கள், டால்பின் மீன்கள் ஆகியவைகளை கடலில் விட்டு மீனவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் மன்னர்-வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் கரை வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில் கரவலையை இழுத்து கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் வலையில் அரிய வகையாக பார்க்கப்பட்டு வருகின்ற கடல் பசு சிக்கி உள்ளது.
மேலும் தெரிந்து கொள்ள /// வேலூர் : தரைப்பாலம் அமைத்திடக் கோரி கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம்...
இதையடுத்து மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசுவை வலையில் இருந்து மீட்டு வனத்துறையினரும், மீனவர்களும் மீண்டும் கடலுக்குள் விட்டனர்.மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் அரிய வகை கடல் பசுக்கள் டால்பின் மீன்கள் ஆகியவைகளை கடலில் விட்டு மீனவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் தெரிந்து கொள்ள /// சங்கரன்கோவில் யானைக்கு தீவிர சிகிச்சை... போராடும் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள்...