பள்ளி மாணவர்களை சம்பளத்திற்கு பணி அமர்த்தி, சட்டவிரோதமாக வேலை வாங்கிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்

அரசு குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்கள் பல போட்டாலும் அவைகள் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும், இன்னும் சென்றடையாமல் தனியார் நிறுவனங்களால் செல்லரித்து போயிருப்பது அனைவரும் அறிந்ததே.
பள்ளி மாணவர்களை சம்பளத்திற்கு பணி அமர்த்தி, சட்டவிரோதமாக வேலை வாங்கிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பள்ளி மாணவர்களை சம்பளத்திற்கு பணி அமர்த்தி, சட்டவிரோதமாக வேலை வாங்கிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் நியாமற்ற செயல் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம். இனியொரு விதி செய்வோம்" என்றான் பாரதி ....

சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்களே அவற்றை சமாதியாக்கிய ஒரு நிகழ்வு திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியில் அரங்கேறி தமிழகத்திற்கு அவமானத்தை தந்திருக்கிறது

இங்கே அரசு ஊழியார்கள், தாங்கள் செய்ய வேண்டிய பணிகளுக்காக பள்ளி சிறுவர்களை தொழிலாளியாக்கிய சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

திருத்தணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநில நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருத்தணி சென்னை சாலை, திருத்தணி அரக்கோணம் சாலை, திருத்தணி பொதுப்பணித்துறை அலுவலகம், திருத்தணி பொதட்டூர்பேட்டை சாலை போன்ற பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இவைகளை பொறுப்புடன் செய்ய வேண்டிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களை வைத்து வேலை வாங்கியதோடு அதற்கு சம்பளம் கொடுத்து தொழிலாளர்களாக மாற்றியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசு குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்கள் பல போட்டாலும் அவைகள் செங்கல் சூளைகளுக்கும், தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும், இன்னும் சென்றடையாமல் தனியார் நிறுவனங்களால் செல்லரித்து போயிருப்பது அனைவரும் அறிந்ததே.

தனியார் நிறுவனங்கள் தான் சட்டத்தை மீறி சிறார்களை வேலை வாங்கி வருகிறது என்றால்., அதை தட்டி கேட்க வேண்டிய அரசு அதிகாரிகளே குழந்தை தொழிலாளர்களுக்கு குடை பிடித்திருப்பது சமூகத்தின் அவலங்களை வெளிப்படுத்தியிருக்கிறது

மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டிய அரசாங்கமே அதை ஓரங்கட்டிவிட்டு வாகன கணெக்கெடுப்புக்கு பணி செய்யச்சொல்லி கூலியும் கொடுத்திருப்பதை எவ்வாறு சகித்து கொள்ளமுடியும் என சமூக ஆரவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொழில்நுட்ப துறையில் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒரு தேசத்தில், நெடுஞ்சாலை துறையிலும், போக்குவரத்து துறைகளிலும் அதி நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சாலை வாகன கணக்கெடுப்பு பணியில் பள்ளி மாணவர்களை தொழிலாளார்களாக பயன்படுத்தியிருப்பது எந்த விதத்தில் நியாயம் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

தேசத்தில் கல்வியில் முன்னணியில் தமிழகம் இருப்பதாக பெருமை பட்டுகொள்ளும் அரசு, படிக்க வேண்டிய மாணவர்களை திசை திருப்பி, பணம் கொடுத்து வேறு ஒரு பாதையில் பயணிக்க வைக்க முயற்சிப்பது விந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யார் செய்தாலும் வேருக்கு விஷம் பாய்ச்ச முயற்சிப்பது குற்றமே என்பது போல மாணவர்களை இந்த பணிகளுக்காக அனுமதித்த கல்விநிறுவன பொறுப்பாளர்களும், சிறார்களை வைத்து சாலை கணக்கெடுப்பு பணிகளை நடத்திய நெடுஞ்சாலை அதிகாரிகளும் தண்டிக்கபடவேண்டியவர்களே என்கின்றனர் சட்டம் படித்தவர்கள்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com