
திருப்பத்தூர் | திருப்பத்தூர் நகர பகுதியில் உள்ள சிவராஜ்பேட்டை பகுதியில் பெயிண்டர் தொழில் செய்து வரும் நிலையில் அவரது வீட்டில் மின் கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்துள்ளது.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்ற போது அந்த அருகில் இருந்த கூரை வீட்டின் மீது விழுந்து இரண்டு கூரை வீடுகளும் தீ பிடித்து எரிந்துள்ளது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீரை எடுத்து உடனடியாக தீயை அணைத்ததால் அருகில் இருந்த கூரை வீடுகள் தீ பிடிக்காமல் தடுத்து பெரும் விபத்து ஏற்படாமல் சாமர்த்தியமாக செயல்பட்டு உள்ளனர்.
இதனால் இரண்டு வீடுகளில் உடமைகள் எறிந்து சேதமான நிலையில் திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | ஈச்சர் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட குட்கா... டிரைவர் தலைமறைவு!!!