சிறையிலிருந்து வந்தால் மீண்டும் குற்ற சம்பவங்கள்....! தொடர் சிறையில் அடைக்கப்பட்ட இரு இளைஞர்கள்...!

சிறையிலிருந்து வந்தால் மீண்டும் குற்ற சம்பவங்கள்....! தொடர் சிறையில் அடைக்கப்பட்ட இரு இளைஞர்கள்...!

Published on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி ஆகஸ்ட் மாதம் 8- தேதி இரவு தி.மு.கவைச் சேர்ந்த மோகன் என்பவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய திருத்தணி ஜோதி நகரை சேர்ந்த சஞ்சய், திருத்தணி பெரியார் நகரச் சேர்ந்த விக்கி, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த நிதிஷ் ஆகியோரை திருத்தணி போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் சிறையில் உள்ள சஞ்சய் மற்றும் நிதிஷ் ஆகிய இருவர் சிறையில் இருந்து வெளியில் வந்தால் மீண்டும் கொலை சம்பவங்கள் திருத்தணி நகரத்தில் நடைபெறும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், சஞ்சய் மற்றும் நிதீஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தொடர் சிறை காவலில் வைப்பதற்கு கையெழுத்து போட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com