தமிழக மீனர்களை ஹெலிகாப்டரில் மீட்டு, துப்பாகியால் சுட்ட இந்திய கடற்படை...

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினரே துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது வேதனை அளிப்பதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார். 
தமிழக மீனர்களை ஹெலிகாப்டரில் மீட்டு, துப்பாகியால் சுட்ட இந்திய கடற்படை...
Published on
Updated on
2 min read

மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு, மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய கடற்படையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

பல முறை எச்சரிக்கைகள் விடுத்தும் மீனவர்கள் நிற்காமல் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த மீனவர்களின் படகில்ல் சென்ற மயிலாடுதுறை மாவட்டம் மானகிரி  பகுதிட்யைச் சேர்ந்த 30 வயதான வீரவேல் என்ற மீனவர், துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்ததாக அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

துப்பாக்கி குண்டு காயத்துடன் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவரை மீட்கும்படி இந்திய கடற்படையினருக்கு தகவல் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் மீனவரை மீட்ட இந்திய கடற்படையினர், அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

நான்கு குண்டுகள் வயிற்றில் தொடையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு முழங்கால், தொடை மற்றும் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவரை மேல் சிகிச்சைக்காக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரை சுட்டது இந்திய கடற்படையினர் தானா என்ற கேள்விகளும் கிளம்பியது.

இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவரை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பி.மூர்த்தி, ஆட்சியர் அனீஷ்சேகர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com