சர்வதேச கலை  மற்றும் கலாச்சார விளையாட்டு திருவிழா; பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பு...

சர்வதேச கலை  மற்றும் கலாச்சார விளையாட்டு திருவிழா; பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பு...
Published on
Updated on
2 min read

20 நாட்டு கல்லூரிகள் பங்குபெறும் பன்னாட்டுக் கலை விழா வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடியேற்றத்துடன் துவங்கியது. 

சர்வதேச கலை  மற்றும் கலாச்சார விளையாட்டு திருவிழா:

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 4 நாட்கள் நடைபெறும்  (ரிவேரா-23) சர்வதேச கலை  மற்றும் கலாச்சார விளையாட்டு திருவிழா இன்று தொடங்கியது. இந்த விழாவில், முன்னணி கிரிக்கெட் வீரா், திரைப்பட நடிகர்கள், நடிகைகள், பின்னணி பாடகா்கள் உள்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்க உள்ளனா். 20 நாடுகளைச் சேர்ந்த கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.தொடக்க நாளான இன்று இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி கலைவிழாவினை தொடங்கி வைத்தார். அதோடு வி.ஐ.டி பல்கலைக்கழக மாணவர்களோடு செல்பி எடுத்துக்கொண்டார்.

 தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ரஹானே :

கல்லூரிப் பருவம் என்பது சொர்க்கம் போன்றது

. மீண்டும் கிடைக்காதது. நானும் அதற்காக இப்போது ஏங்குகிறேன்.இந்த கல்லூரி பருவம் மிகவும் அழகானது மகிழ்ச்சியான நாட்கள்.மீண்டும் எனக்கு இந்த கல்லூரி பருவம் கிடைக்காதா என ஏங்கினேன். 

ஒழுக்கம் மிகவும் முக்கியம்.மாணவர்கள் பேராசிரியர்கள் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைவரையும் ஒரே அளவில் மதிப்பளிக்க வேண்டும். கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் அரங்கம் எனக்கு உயிர் மூச்சு , அதே போல் டிரைவிங் எனக்கு மிகவும் பிடிக்கும் இணைப்பும் கூறியுள்ளார்.

தன்னுடைய ரோல் மாடல் ராகுல் டிராவிட் , சச்சின் , தோனி என்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று கூறினார்.நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்துகொண்டனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com