முறைகேடான பத்திர பதிவு... தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்...!!!

முறைகேடான பத்திர பதிவு... தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்...!!!
Published on
Updated on
1 min read

முறைகேடாக தங்களுக்கு தெரியாமல் நிலத்தை பதிவு செய்ததாக புகாரளித்து குடும்பத்தினரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பழனி அடுத்த ஓபுலபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன்.  ரவிச்சந்திரனுக்கு சொந்தமாக ஆயக்குடியில் 13 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.  இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு தெரியாமல் அவருடைய விவசாய நிலத்தில் ஆறு ஏக்கரை போலியாக சிலர் பத்திரப்பதிவு செய்ததாக கூறி பழனி பத்திர பதிவுத்துறை அலுவலகத்திற்கு பதிவாளர் சுரேந்தரை சந்தித்து புகார் தெரிவிக்க வருகை தந்தார்.  

அப்போது ரவிச்சந்திரனுடன் வருகை தந்த அவரது மகன் ஜெகன், மருமகள் புவனேஸ்வரி ஆகியோர் கையில் பெட்ரோல் கேன்னை எடுத்து வந்து தீ குளிக்க முயற்சி செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் உடனடியாக பெட்ரோல் கேன்னை பறித்து சென்றனர். பின்னர் ரவிச்சந்திரன், ஜெகன், புவனேஸ்வரி ஆகியோர் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  முறைகேடாக நடந்த பத்திரப்பதிவை ரத்து செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்ததால் பத்திரபதிவு அலுவலகத்தில்  பரபரப்பு ஏற்பட்டது.  போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சு வாத்தையில் நடத்திய சார்பதிவாளர் விசாரணை செய்து உரிய  நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார்.  இதனை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஸ்வரி தங்களுக்கு சொந்தமான ஆறு ஏக்க விவசாய நிலத்தை முறைகேடாக போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு நடந்துள்ளதாகவும், தற்போது வரை தங்களுடைய அனுபவத்தில் நிலம் உள்ளது. நிலத்திற்க்கு  பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தங்கள் பெயரில் உள்ளது. ஆனால் தங்களது உறவினர்களான கலாவதி, அருண்குமார் உள்ளிட்ட சிலர் போலி ஆவணங்களை தயாரித்து தொடர்ச்சியாக பெயர்களை மாற்றி மாற்றி பத்திர பதிவுகளை மட்டும் செய்து வில்லங்கம் ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் கூறினார்.
 
இதுகுறித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளதாகவும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.  தற்போது கடைசியாக மகாலிங்கம் என்பவர் மூன்று தினங்களுக்கு முன்பாக தங்களது நிலத்தை மூறைகேடாக பழனியை சேர்ந்த ஜெயச்சந்திரன், பாலமுருகன், முருகன் உள்ளிட்ட நான்கு பேருக்கு விற்பனை செய்ததாக பத்திர பதிவு செய்துள்ளனர்.  பட்டா உள்ளிட்ட எந்த ஆவணத்தையும் சரிபார்க்காமல் பத்திர பதிவு அலுவலகத்தில் அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு பதிவு செய்வதாக புவனேஸ்வரி  குற்றம் சாட்டினர். முறைகேடாக பத்திரப்பதிவு நடந்ததாக கூறி குடும்பத்தினர் பெட்ரோல் கேனுடன் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com