இதற்கு இரண்டு முதலமைச்சர்கள் பங்கேற்பது என்பது கண்டிக்கத்தக்கது....தமிழ்நாடு சட்டசபையை ஸ்தம்பிக்க வைப்போம்..!!

இதற்கு இரண்டு முதலமைச்சர்கள் பங்கேற்பது என்பது கண்டிக்கத்தக்கது....தமிழ்நாடு சட்டசபையை ஸ்தம்பிக்க வைப்போம்..!!
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் தோள் சீலை 200வது ஆண்டு நிறைவு பொதுக் கூட்டத்தில் நாடார்களை குறைத்து மதிப்பிட்டு பேசக்கூடாது எனவும் நாடார்களை தரக் குறைவாக பேசுவதற்கு என்று ஒரு கூட்டம் எனவும் கூறியுள்ளார் தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ்.

தோள்சீலை போராட்டம்:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் தோள் சீலை 200 வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.  இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் பல்வேறு இடதுசாரி கட்சித்தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றார்கள்.  இந்நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் நாடார்கள் குறித்து தரக் குறைவாக பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் நடைபெற்றுள்ளது.  

கண்டனம்:

இந்த கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு நாடார் சங்க தலைவர்.முத்து ரமேஷ் செய்தியாளர் சந்தித்தார்.  அப்போது அவர் " தோள் சீலை போராட்டம் என்பது நாடார் சமுதாயத்தை தவறாக சில ஜாதி வெறியர்களால் சில நபர்களால் திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு பதிவு செய்யப்பட்ட வரலாறாக மாறி உள்ளது.  நாடார் சமூகம் என்பது எந்த காலத்திலும் தோள் சீலை போடாமல் இருந்தது கிடையாது.  நாடார்கள் மீது இந்த அரசுக்கு ஏன் காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை. இன்றைய நாகரீகத்தை விட அன்று அழகான உடை அணிந்து பெண்மணிகள் தோள் சீலை அணிந்த புகைப்படங்கள் இன்றும் உள்ளது.  அப்படி இருக்கும்போது தவறாக தோள் சீலை போராட்டத்தில் நாடார்கள் பாதிக்கப்பட்டதாக சித்தரிக்கிறார்கள்.” எனப் பேசியுள்ளார்.

1 கோடி மக்கள் போராட்டம்:

மேலும் தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் இணைந்ததிற்கு போராடிய நாடார்களின் தலைவருக்கு என்று தனி விழா எடுத்திருக்கிறார்களா, கவுரவப்படுத்திருக்கிறார்களா, இந்நிலையில் கீழ்த்தரமாக பேசப்படுவதற்கென்று ஒரு பொதுகூட்டம் எடுத்தது கண்டிக்கத்தக்கது.  எனவே நாடார்களை குறித்து தவறாக யார் பேசினாலும் அரசியல் ரீதியாக பதிலடி கொடுக்கப்படும்.  மேலும் தவறாக பேசும் பட்சத்தில் தமிழகத்தை சேர்ந்த மொத்த நாடார் அமைப்புகள் சேர்ந்து 1 கோடி மக்கள் திரட்டி போராட்டம் நடத்தக்கூடும்.  மேலும் தமிழ்நாடு சட்டசபையை ஸ்தம்பிக்க வைப்போம் என தெரிவித்து,இந்த கூட்டத்தில் நாடார்கள் குறித்து கீழ்த்தரமாக தரம் தாழ்ந்து பேசக்கூடாது, கவுரவப்படுத்தி பேச வேண்டும் என தெரிவிப்பதோடு இந்த தோள் சீலை 200 ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com