பிரபல திருட்டு குற்றவாளி ஸ்டீபன் - காவலரின் கையை கிழித்து தப்பிக்க முயற்சி - போலீசார் சுட்டு பிடித்த சம்பவம்!

குற்றவாளியை காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்..
theft Stephen arrest news
theft Stephen arrest news Admin
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்டம், அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வல்லம்படுகை கிராமத்தில் கடந்த 18 /3/2025 ஆம் தேதி காலை கஜேந்திரன் (35) என்பவரது வீட்டில் 21 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு லேப்டாப் ஆகியவற்றை திருடிய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் ( 35 ) என்பவரை வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வந்த நிலையில், நேற்று இரவு 09:00 மணிக்கு கைது செய்யப்பட்டு நிலையத்தில் இரவு காவலில் வைக்கப்பட்டிருந்தவரை, காலை சுமார் ஐந்து முப்பது மணிக்கு திருட பயன்படுத்திய பொருட்களை கைப்பற்றுவதற்காக மேற்படி எதிரியுடன், ஆய்வாளர் திரு அம்பேத்கர், தலைமை காவலர்கள் மணிகண்டன் ராஜீவ் காந்தி, ஞான பிரகாசம், ஓட்டுனர் தலைமை காவலர் ரமணி, ஆகியோர் சென்றபோது, சித்தலபாடி ஒற்றைப் பனை மரம் அருகே 6 மணி அளவில், ஸ்டீபன் முதல் நிலைக் காவலர் ஞானப்பிரகாசத்தை, தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் மேற்படி காவலரின் இடது கையை கிழித்தது தப்பிக்க முயற்சி செய்துள்ளார் தற்காப்புக் கருதி ஆய்வாளர் அம்பேத்கர் அவர்கள் ஸ்டீபனின் வலது காலில் முட்டிக்கு கீழே சுட்டுள்ளார். மேற்படி நபர் தற்போது மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அண்ணாமலை நகரில் சிகிச்சையில் உள்ளார். மேலும் ஸ்டீபன் மீது திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 26-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com