திறப்பு விழா காணாமலேயே அழியப்போகும் உடற்பயிற்சி கூடம்...

பூங்கா கட்டப்பட்டு இது வரை திறப்பு விழா கூட காணாத நிலையில்,
திறப்பு விழா காணாமலேயே அழியப்போகும் உடற்பயிற்சி கூடம்...
Published on
Updated on
2 min read

கள்ளக்குறிச்சி அருகே உள்ள  உள்ள  நீலமங்கலம் கிராமத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2018 -2019 நிதியாண்டில் சுமார்  35 லட்சம் மதிப்பீட்டில் அப்போதைய ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அம்மா பூங்கா உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது.

இந்த அம்மா பூங்கா உடற்பயிற்சி கூடம் இன்று வரை திறக்கப்படாமலேயே திறப்பு விழா காணப்படாமல் சிதைந்து சிதிலமடைந்து வீணாகி கிடக்கிறது. இதனால் யாருக்கும் பயனில்லை.

35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்மா பூங்கா உடற்பயிற்சி கூடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் அரசு பணம் வீணாக செலவழிக்கப்படுகிறது என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கட்டப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் மாட்டு தொழுவமாகவும் மாறியுள்ளது அதிலிருந்த மின்னொளி கம்பங்கள், தண்ணீர் தொட்டிகள், கழிவறைகள், அதிலிருந்த உபகரணங்கள் அனைத்தும் சமூக விரோதிகள் உடைக்கப்பட்டு யாருக்கும் உபயோகப்படாமல் கிடக்கிறது.

அரசு பணம் என்பதால் அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருவதுடன் அதில் கவனம் செலுத்தாமல் இருப்பதா? இல்லை கடந்த ஆட்சியில் கட்டப்பட்டது என்பதால்  அது குறித்த நடவடிக்கை இல்லாமல் இருப்பதா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர் எனவே அரசு பணம் இப்படி வீணாகாமல் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடனடியாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com