கழுத்தில் காலி பாட்டில்களை மாட்டிக் கொண்டு நூதன முறையில் மனு கொடுத்த பாஜக-வினர்...

கழுத்தில் காலி பாட்டில்களை மாட்டிக் கொண்டு நூதன முறையில் மனு கொடுத்த பாஜக-வினர்...
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் | பேருந்து நிலையம் அருகே அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்ரகுப்தர் கோவில் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. 

சித்ரகுப்தர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையால் புனித தன்மை சீர்குலைந்து அசுத்தம் ஏற்பட்டு வருவதாகக் கூறி, பக்தர்களும் அப்பகுதி மக்களும் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இருந்தும் இதுவரை அந்த டாஸ்மாக் கடையை அகற்றப்படாமல் இருக்கும் சூழ்நிலையால் தினந்தோறும் வரும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரும் 27ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பட்டு மாவட்ட தலைவர் குமார் தலைமையில் டாஸ்மாக் கடை முன்பு பந்தல் அமைத்து சிவவாத்திய முழங்க சிவனடியார்கள் அறவழியில் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கின்றனர் பாஜகவினர்.

இதனையொட்டி, கழுத்தில் காலிபாட்டில்களை மாலைபோல் அணிவித்து நூதன முறையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் அனுமதி கோரி மனு வழங்கினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com