“யாருக்கும் இப்படி ஒரு கல்யாணம் நடக்கக் கூடாது” - ICU-வில் தாலி கட்டிய மணமகன்.. திருமணத்திற்கு முன்பு நடந்த கோர விபத்து!

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மணப்பெண் மற்றும் உடனிருந்தவர்களை மீட்டு அருகில் இருந்த கோட்டயம்....
“யாருக்கும் இப்படி ஒரு கல்யாணம் நடக்கக் கூடாது” - ICU-வில் தாலி கட்டிய மணமகன்..  திருமணத்திற்கு முன்பு நடந்த கோர விபத்து!
Admin
Published on
Updated on
1 min read

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், கொம்முடி பகுதியை சேர்ந்தவர் ஆவணி(Aavani). இவருக்கும் மதம்பொலியை சேர்ந்த ஷரோன்(Sharon) என்பவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஆலப்புழாவில் உள்ள சக்தி ஆடிட்டோரியத்தில் கடந்த (நவ 21) தேதி மதியம் 12.12 மணிக்கு திருமணம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனவே (நவ 20) ஆம் தேதி இரவு திருமண வரவேற்பு நடைபெற்று முடிந்த நிலையில் காலை திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலை திருமணத்திற்கு மணப்பெண் அலங்காரத்திற்காக ஆவணி தனது உறவுக்கார பெண் மற்றும் தனது நண்பர்களுடன் அவரது காரில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த ஆஸ்க்காது நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது பாதி வழியில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மணப்பெண் மற்றும் உடனிருந்தவர்களை மீட்டு அருகில் இருந்த கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் மேலும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

Admin

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் மணமகன் வீட்டார் சிகிச்சை கேட்டறிந்தனர். அதனை தொடர்ந்து சிறப்பு சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள வி.பி.எஸ். லேக்ஷோர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மணப்பெண் ஆவணிக்கு முதுகுத்தண்டு வடத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையிலும் திருமணத்தை நிறுத்தவேண்டும் என எண்ணிய இரு வீட்டாரும் மருத்துவமனையில் வைத்தே திருமணத்தை செய்ய முடிவு செய்திருக்கின்றனர்.

அதன்படி மருத்துவர்களின் அனுமதியுடன், அவசர சிகிச்சை பிரிவில் படுத்திருந்த ஆவணியின் கழுத்தில் மணமகன் ஷரோன் தாலி கட்டினார். திருமணத்தை காண மண்டபத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு வழக்கம் போல் திருமண விருந்து பரிமாறப்பட்டது. அவணியுடன் பயணித்த மேலும் 3 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்று ஆவணிக்கு முதுகு தண்டு வடத்தில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com