
கோயம்புத்தூர், அவிநாசி ரோடு விரியம் பாளையம் சாலையில் பிரைடல் ஸ்டுடியோ நூர் திறப்பு விழா நடைபெற்றது. அந்த ஸ்டுடியோவை நடிகரும் பிரபல தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மணப்பெண்களுக்கான நவீன மேக்கப் சாதனங்களை பார்வையிட்டார். திறப்பு விழாவில் பங்கேற்க வந்த நடிகர் சரவணன் பிரைடல் மேக்கப் நிறுவனத்தின் உரிமையாளர் நூர் வரவேற்றார். அவருடன் ரசிகர்களும் வரவேற்பளித்தனர். இந்த நிகழ்ச்சியில் லெஜெண்ட் சரவணன், நடிகர் ரோபோ சங்கர், அப்புகுட்டி மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய அவர், கோவையில் கலை ரசனை உள்ளவர்கள் அவர்களுக்காக பிரைடல் மேக்கப் நூர் நிறுவனத்தை நூர் முகமது துவங்கியுள்ளார். அவருடைய கடினமான உழைப்பு பாராட்ட தகுந்தது. பொதுவாக, தான் கடுமையாக உழைப்பவர்களை, தொழிலை நேசிப்பவர்களை நேசிப்பேன். தனக்கு பல்வேறு நிகழ்வுகளுக்கு அழைப்புகள் இருந்தாலும் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு செல்வதில்லை.
ஆனால் கலைத்துறையாளர்களுக்கு மேக்கப் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றை முழுமையாக நேசித்து சேவை செய்து வருகிறார் நூர் முஹம்மது. அவருடைய அன்பால் ஈர்க்கப்பட்டு அவருடைய கடின உழைப்பை நேசித்து இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன். கோவை மக்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் லெஜெண்ட் சரவணன் கூறியுள்ளார்.