
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் திருத்தணி அருகில் உள்ள சிவாடா பேருந்து நிலையப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்த போது அந்த வாகனத்தில் வைத்திருந்த மூட்டையில் 30 லிட்டர் எரி சாராயம் எடுத்து வந்தது தெரிய வந்தது.
பின்னர் அந்த இருசக்கர வாகனத்தையும், அதனை ஓட்டி வந்த நெமிலி காலனி பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(24) என்ற இளைஞரையும் பிடித்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.